Monday 28 March 2016

கோடை வெயிலை எதிர்க்கும் கடலை மாவு

                       
அழகின் முதல் எதிரி வெயில்! சருமம், கூந்தல் என உச்சி முதல் பாதம் வரை அழகையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கற வெயிலை எப்படித்தான் எதிர் கொள்வது? வெயிலை பழிப்பதை தவிருங்கள். தினமும் சோப்பைக் கொண்டு முகத்தைக் கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறும், இதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

     இந்த பிரச்சனைகளிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்க ஓர் எளிய முறை தினமும் சருமத்திற்கு சோப்பை பயன்படுத்தாமல் நம் முன்னோர்கள் பயன்படுத்திய கடலை மாவைக் கொண்டு சருமத்தை பாதுகாக்கலாம். இதனால் சருமத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

கடலை மாவின் நன்மைகள் :

     வெயிலால் நம் சருமம் எளிதில் கருமை ஆக கூடும் ,இதற்கு  சோப்பைக் கொண்டு கழுவினால் எந்த மாற்றமும் ஏற்படாது . அதற்கு பதிலாக கடலை மாவைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமை எளிதில் நீங்கிவிடும்.

  கடலை மாவைக் கொண்டு முகத்தை தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் பளிச்சென்று மின்னும்.

    பலருக்கும் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படும். இதற்கு முதன்மையான காரணம் சரியான தூக்கம் இல்லாமையே , இதனை போக்க தினமும் கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் போதும் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கலாம்.

    கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வர, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீக்கப்பட்டு, பிம்பிள் வருவது தடுக்கப்படும்.
மற்றும் கரும்புள்ளிகளை போக்குகிறது.

    கடலை மாவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment