Monday 28 March 2016

கோடை வெயிலை எதிர்க்கும் கடலை மாவு

                       
அழகின் முதல் எதிரி வெயில்! சருமம், கூந்தல் என உச்சி முதல் பாதம் வரை அழகையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கற வெயிலை எப்படித்தான் எதிர் கொள்வது? வெயிலை பழிப்பதை தவிருங்கள். தினமும் சோப்பைக் கொண்டு முகத்தைக் கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறும், இதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

     இந்த பிரச்சனைகளிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்க ஓர் எளிய முறை தினமும் சருமத்திற்கு சோப்பை பயன்படுத்தாமல் நம் முன்னோர்கள் பயன்படுத்திய கடலை மாவைக் கொண்டு சருமத்தை பாதுகாக்கலாம். இதனால் சருமத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

கடலை மாவின் நன்மைகள் :

     வெயிலால் நம் சருமம் எளிதில் கருமை ஆக கூடும் ,இதற்கு  சோப்பைக் கொண்டு கழுவினால் எந்த மாற்றமும் ஏற்படாது . அதற்கு பதிலாக கடலை மாவைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமை எளிதில் நீங்கிவிடும்.

  கடலை மாவைக் கொண்டு முகத்தை தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் பளிச்சென்று மின்னும்.

    பலருக்கும் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படும். இதற்கு முதன்மையான காரணம் சரியான தூக்கம் இல்லாமையே , இதனை போக்க தினமும் கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் போதும் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கலாம்.

    கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வர, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீக்கப்பட்டு, பிம்பிள் வருவது தடுக்கப்படும்.
மற்றும் கரும்புள்ளிகளை போக்குகிறது.

    கடலை மாவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

Friday 18 March 2016

நான்கு வகை கீரையும் அதன் அதிசய நன்மையும்

                                                                    
மணத்தக்காளிக் கீரை இதன் காய்களை உப்பு, மோரில் பிசிறி வெயிலில் காய வைத்து, எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆகியவை குணமாகும்.

சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு, தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிது பருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்... பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும்.

பசலைக்கீரை வயிற்றில் இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச் செய்யும் குணம் இதற்கு உண்டு.


பசலைக் கீரை முக அழகையும், சருமத்தில் பளபளப்பையும், கவர்ச்சியான நிறத்தையும் பெற இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.பசலை ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலின் வெப்பத்தைக் குறைக்கக் கூடியது. இக்கீரையை வீக்கம், கட்டிகளுக்கு மேல் விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்ட வீக்கம் வற்றிவிடும்.

வல்லாரைக் கீரை இதனை நிழலில் உலர்த்திப் பொடித்து நன்கு உலர்ந்த பிறகு, காலை, மாலை என  இருவேளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள கீரிப்பூச்சிகள், நாடாப்புழுக்கள்,ஆகியன வெளியேறுவதோடு ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

எந்தக் கீரையானாலும் துவையல் செய்தே சாப்பிடலாம்.

Thursday 17 March 2016

முகப்பொழிவும் ,பழத்தோலும்

                                                 


எலுமிச்சைத் தோல் ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படுகிறது. சிலருக்குக் கை, கால் முட்டிகளில் கறுப்பாக இருக்கும். எலுமிச்சைத் தோலை கருமையான இடங்களில் தேய்த்துவர, கருமை நீங்கி, நல்ல பலன் கிடைக்கும். மேலும், இது சருமத்துக்குப் பளபளப்பையும் தர வல்லது.

ஆரஞ்சுப்பழத் தோலை பாத வெடிப்புகளில் பூசி வந்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.இதனை பொடி செய்து அதனுடன் சிறிது பால் ,தயிர் சேர்த்து ஃபேஸ்பேக் போல பயன்படுத்தி வந்தால்  பொலிவிழந்த முகம் களைகட்டும்.

ஆரஞ்சுப்பழத் தோலில் இருந்து சாறு எடுத்து, முகத்துக்குப் பூசிவர கரும் புள்ளிகள் நீங்கி, முகம் பளபளப்பாக மாறும்.

பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், எலுமிச்சைப்பழத் தோலை நன்கு கசக்கி, தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்தால், பொடுகு குறைந்து, சில வாரங்களில் நல்ல பலன் தெரியும்.

எலுமிச்சைப்பழத் தோலை நகங்கள் மீது தேய்த்தால் பளபளப்பாக இருக்கும்.

மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து அதனை  தண்ணீர்விட்டுக் குழைத்து, சருமம் மற்றும் தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், முகப்பரு உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும்.

கண்களில் கருவளையங்களை கொண்டவர்கள் பலர் உண்டு. இதற்கு திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே  தடவினால் போதும். கருவளையங்கள் போய் விடும்.