Wednesday 10 February 2016

இளநரை நீங்க



1.  காபி, டீ போன்றவை உடலில் ஊட்டச்சத்து சேர்வதைத் தடுக்கின்றன எனவே காபி, டீ அருந்துவதை குறைக்க வேண்டும்

2. ஒரு டீஸ்பூன் நெய் அதனுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா மூன்றையும் சாறாக்கி இரண்டு டீஸ்பூன் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிட்டுவந்தால் இளநரை நீங்கி கூந்தல் கருப்பாக மாறும்.

3. முட்டை, பால், பேரீச்சம்பழம், கீரை, பருப்பு போன்றவற்றைச் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது. பருப்புடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்கும்.

4. தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடலாம்

5. காலை உணவாக வாரத்தில் இரண்டு முறை சிவப்பு அரிசியை வேகவைத்து தேங்காய், வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்

6. நான்கு பாதாம் பருப்பு, நான்கு பிஸ்தா பருப்பு இரண்டையும் இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் தோல் நீக்கிச் சாப்பிட்டு வரலாம்

7. தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்

9. இரண்டு பேரீச்சம்பழம், ஆறு உலர்ந்த திராட்சையும் சேர்த்துச் சாப்பிடலாம்

இந்த உணவு முறை தொடர்ந்து எடுத்துவந்தால்   இளநரை நீங்கிவிடும் 

No comments:

Post a Comment